ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ், கட்டணம் அடிப்படையில் ட்விட்டரில் அளித்து வந்த விளம்பரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
புதிய உரிமையாளரின் தலைமையின்கீழ் ட்விட்டர் எவ்வாறு செயல்பட இருக்கிறது என்பது குறித்து அந்நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருவதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.