'மையோசைடிஸ்' எனப்படும் தசைப் பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளதாக நடிகை சமந்தா சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்.
டிரிப்ஸ் ஏற்றிக்கொண்டு அமர்ந்திருப்பது போன்ற தனது புகைப்படத்தை வெளியிட்ட அவர், சில மாதங்களுக்கு முன் 'மையோசைடிஸ்' எனும் தசைப் பாதிப்பு நோய பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், முழுமையாக குணமடைந்தபின் இதனை தெரிவிக்க நினைத்த நிலையில், குணமடைய கூடுதல் காலம் எடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாதிப்பை ஏற்றுக் கொண்டு அதனுடன் போராடிக் கொண்டிருப்பதாகவும் சமந்தா கூறியுள்ளார்.