உலக பக்கவாத தினத்தையொட்டி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பக்கவாத நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பக்கவாத நோய் தடுப்பு முறைகள் குறித்த பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு பேரணியை நடத்திய நரம்பியல் துறை மாணவர்கள் பக்கவாத நோய் தடுப்பு குறித்த உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய நரம்பியல் துறை பேராசிரியர், மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பின் காரணமாகவும், ரத்த குழாயில் ஏற்படும் ரத்த கசிவு காரணமாகவும் பக்கவாதம் ஏற்படுகிறது.
பக்கவாத நோயைப் பொறுத்தவரை தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்தானது எனக் கூறினார்.