உக்ரைனில் மின்நிலையங்களைக் குறி வைத்து ரஷ்யா வான் வழித் தாக்குதல் தொடுத்து வரும் நிலையில் சுமார் 40 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் இருளுக்குள் தள்ளப்பட்டிருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மின் விநியோக முறையை குறி வைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல் தொடுப்பதாக ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
மின் விநியோகத்தை சீரமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செய்து வருவதாகவும் ஜெலன்ஸ்கி கூறினார்.