உத்தரப்பிரதேசம் காஸ்கஞ்ச் மாவட்ட நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் சிலர் தலைமுடியைப் பிடித்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கன்னத்தில் அறைந்தும் தலைமுடியை இழுத்து விட்டும் பெண்கள் தாக்கிக் கொண்டனர் பெண் காவலர்கள் தலையிட்டு இருதரப்பையும் பிரித்து வைத்தனர்.
காஸ்கஞ்ச் குடும்பநல நீதிமன்றத்தில் இரு வழக்கறிஞர்களும் தங்கள் தரப்பு மனுதாரருக்காக ஆஜரான நிலையில், விசாரணை முடிந்து வெளியே வந்தும் வழக்கு தொடர்பாக எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் மோதிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.