சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்களை குறிவைத்து செல்போன்களை திருடிவந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆட்டோ ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், தனது செல்போன் திருடு போனதாக, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிசிடியில் காட்சிகளைக்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளையடித்தவர்கள் ஆவடியை சேர்ந்த உஸ்மான் அலி மற்றும் சமீர் பாஷா என்பது தெரியவந்தது.
ஆட்டோ ஓட்டுனர்களை சவாரிக்கு அழைத்துச்சென்று அவர்களின் கவனத்தை திசை திருப்பியோ, அல்லது பேசிவிட்டு தருகிறேன் எனக் கூறியோ செல்போன்களை கொள்ளையடித்து வந்துள்ளனர்.
கொள்ளையடித்த செல்போன்களை, வடமாநிலத்தை சேர்ந்தவர்களிடம் 2000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை விற்பனை செய்து வந்துள்ளனர்.
கடந்த ஓராண்டாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட செல்போன்களை கொள்ளையடித்த அவர்களை, போலீசார் சிறையில் அடைத்தனர்.