குஜராத் மாநிலம் வதோதராவில் அமைக்கப்படவுள்ள சி-295 போக்குவரத்து விமான தயாரிப்பு ஆலைக்கு பிரதமர் மோடி வரும் 30ம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளார்.
இந்த ஆலையில் இந்திய விமானப்படைக்கு தேவையான சி-295 போக்குவரத்து விமானங்களை, டாடா-ஏர்பஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் என்று பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் விமானப்படைக்கு 40 விமானங்கள் தயாரிப்பதோடு, கூடுதலான விமானங்களும் கட்டமைக்கப்படும் என்றும், அங்கு தயாராகும் விமானங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.