மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் வாயுக் கசிவு ஏற்பட்டதால் பலர் இருமல் வாந்தி மயக்கம் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகினர்.
நீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்றில் இருந்து நேற்று மாலை குளோரின் கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவு மேலும் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
ஆலையின் ஊழியர்கள் சுமார் ஒன்றரை டன் எடை கொண்ட சிலிண்டரை கிரேன் மூலமாக நீருக்குள் தள்ளி விட்டனர்.
அதில் இருந்த 900 கிலோ குளோரின் இதனால் வெளியேற்றப்படாமல் தடுக்கப்பட்டது.