ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ள கார்கீவ் மாகாண பகுதிகளில், கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உக்ரைன் ராணுவ கண்ணிவெடி நிபுணர்கள் தினமும் சுமார் 5 கிலோமீட்டர் பரப்பளவில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றி வருகின்றனர்.
அப்பகுதிகளில், உடனுக்குடன் மின் இணைப்புகளை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ரஷ்ய படைகளால் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை முழுவதுமாக அகற்ற பத்தாண்டுகள் தேவைப்படும் என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.