தலைநகர் டெல்லியில் மக்கள் தடையை மீறி பட்டாசுகள் வெடித்ததால் கடுமையாக காற்று மாசு ஏற்பட்டது.
டெல்லியில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும், 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மாநில அரசின் எச்சரிக்கையையும் மீறி தெற்கு மற்றும் வடமேற்கு டெல்லி உள்பட நகரின் பல பகுதிகளில் அதிக டெசிபல் பட்டாசுகளை மக்கள் வெடித்தனர்.
இதனால் காற்றின் தரம் மோசமாக இருந்தது. 24 மணி நேர சராசரி காற்றுத் தரக் குறியீடு 312 ஆக இருந்தது.