அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கய் சொய்குவுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் நிலவரம் குறித்தும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பாகவும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, ரஷ்யாவிடம் வலியுறுத்தியுள்ளது.
இதே போன்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர், நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், உக்ரைன் போர் நடைபெறும் சூழலில் தகவல் தொடர்புகள் திறந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.