ராஜநாக பாம்பின் தலையின் பின்பகுதியில் கேரளாவை சேர்ந்த பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ் முத்தமிட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவுகிறது.
திருவனந்தபுரத்தில் அண்மையில் காரில் சென்றபோது அரசு பேருந்தில் மோதிய விபத்தில் வாவா சுரேஸ் முதுகெலும்பில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ஏற்கெனவே ராஜ நாக பாம்பை பிடிக்க சென்றபோது, அந்த பாம்பு அறியாத வகையில், பின்னால் மெதுவாக சென்று தலையின் பின்பகுதியில் வாவா சுரேஸ் முத்தமிட்டார்.