ரஷ்யாவின் தாக்குதால் குடிநீர் செல்லும் குழாய்கள் சேதமடைந்தால் உக்ரைனின் மைகோலேவ் நகரில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கப்பல் கட்டும் மையமான மைகோலேவ் நகரில் 5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். ரஷ்யாவின் தாக்குதலால் டினிப்ரோ ஆற்றில் இருந்து மைகோலேவ் நகருக்கு குடிநீர் செல்லும் குழாய்கள் சேதமடைந்தது.
பல கிலோமீட்டர் தொலைவிற்கு குடிநீர் குழாய்களை மாற்றவேண்டி இருப்பதால், மைகோலேவ் நகர மக்கள் நாள்தோறும் தண்ணீருக்காக அருகில் உள்ள பகுதிகளுக்கு கால்நடையாகவும், வாகனங்களிலும் சென்று வருகின்றனர்.