அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த கலவரம் குறித்த விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தி முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு, விசாரணைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்தை, டிரம்ப் திட்டமிட்டு நடத்தியதாக குறிப்பிட்டுள்ள விசாரணை குழு, அவரை நேரிலோ அல்லது வீடியோ கான்பரன்ஸ் முறையிலோ விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது.