தொழிலதிபர் நீரவ் மோடியை பொருளாதார குற்றவாளியாக அறிவித்த மும்பை சிறப்பு பொருளாதாரக்குற்றப்பிரிவு நீதிமன்றம், அமலாக்கத்துறையினர் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள அவருடைய 39 சொத்துகளை பறிமுதல் செய்து ஏலம் விட அனுமதியளித்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கியிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் கடனாகப் பெற்று வெளிநாடு தப்பிச் சென்ற நீரவ் மோடியின் 9 சொத்துகளை அடமானம் வைக்க வங்கி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது