சூடானின் தெற்கு மாகாணமான ப்ளூ நைலில் பழங்குடியின மக்கள் இடையே ஏற்பட்ட நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் 170 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட ஹவுசா பழங்குடியின பிரிவு மக்களுக்கும், இதர குழுக்களுக்கும் இடையே நிலம் பகிர்வில் வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.
இரண்டே நாட்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 170 பேர் மோதலில் உயிரிழந்தனர். மேலும், வன்முறை தொடர்பான சம்பவங்களினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.