அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் மீன்கள் ஏற்றி வந்த டிரக் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
அந்த டிரக்கில் சுமார் 22ஆயிரம் பவுண்டுகள் எடை கொண்ட மீன்கள் கொண்டு செல்லப்பட்டன.
அதிக பாரம் தாங்காமல் அந்த டிரக் கவிழ்ந்ததால், சாலை முழுவதும் மீன்கள் கொட்டி சிதறிக் கிடந்தன.
இதனை அடுத்து அந்த வழியாக வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் சாலையில் இருந்த மீன்களை அகற்றும் பணி நடைபெற்றது.