அமெரிக்காவில் Ohio மாகாணத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் சிறிய ரக விமானம் மோதிய விபத்தில் விமானி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
John Glenn சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த சிறிய விமானம் Marietta பகுதியில் வாகன நிறுத்தம் இடத்தில் எதிர்பாராதவிதமாக மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அங்கிருந்த மக்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் வாகனங்கள், மற்றும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.