இந்தியாவில் 90 வது இன்டர்போல் கூட்டம் நடைபெற்ற நிலையில், தாவூத் மற்றும் ஹபீஸ் போன்ற தீவிரவாதிகள் குறித்த கேள்விகளுக்குப் பதில் கூற முடியாமல் பாகிஸ்தான் தடுமாறியது.
இந்த தீவிரவாதிகள் குறித்து பாகிஸ்தானில் இருந்து வந்த குழுவினரிடம் செய்தியாளர்களால் சரமாரியான கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஐநா.வால் தடை செய்யப்பட்ட இந்த இரு தீவிரவாதிகளும் பாகிஸ்தானில் அரசு பாதுகாப்புடன் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வழக்கம் போலவே இம்முறையும் பாகிஸ்தான் குழுவினர் பதிலளிக்க முடியாமல் திணறி மௌனம் சாதித்தனர்.