டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையில் இன்று ஆஜராகும்படி, டெல்லி துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது.
ட்விட்டரில் இதை உறுதி செய்துள்ள சிசோடியா, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் காலை 11 மணிக்கு ஆஜராகி விசாரணைக்க ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமது வீட்டில் ஆகஸ்ட் மாதம் 14 மணிநேரம் சிபிஐ சோதனை நடத்தியதாகவும், வங்கி கணக்கை ஆய்வு செய்ததில் சிபிஐ எதுவும் கண்டறியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிசோடியாவை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.