உலகின் அபாயகரமான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற ஜனநாயக கட்சி தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் போதிய ஒருங்கிணைப்பு இன்றி இருப்பதாக விமர்சித்தார். அண்மையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 48 பக்க ஆவணம் அந்நாட்டு அரசால் வெளியிடப்பட்டது.
அதில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில் பாகிஸ்தானை அபாயகரமான நாடாக ஜோ பைடன் தெரிவித்திருப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.