கேரளாவில் நரபலி தொடர்பான வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கை கொச்சி நகர காவல் துணை ஆணையர் எஸ்.சசிதரன் தலைமையிலான சிறப்புக் குழு விசாரணை நடத்த கேரள காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாவூர் துணை காவல் கண்காணிப்பாளர் அனுஜ் பாலிவால் முதன்மை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எர்ணாகுளம் துணை ஆணையர் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகளும் இந்த சிறப்பு விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு அதில் ஒருபெண் 56 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட கொடூரம் நாட்டையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இவ்வழக்கு தொடர்பாக முகமது சஃபி, பகவல் சிங், லைலா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்