கேரளாவில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூரை சேர்ந்த சரண்யா என்பவர் இளம்பெண் ஒருவரிடம் கேரளாவில் வேலை வாங்கித்தருவதாகக்கூறி வயநாடுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
அங்கு இளம் பெண்ணை மஞ்சு என்பவரிடம் ஒப்படைத்த நிலையில், அவரை சுற்றுலா விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
விடுதியிலிருந்த நான்கு பேர் அப்பெண்ணை பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கும் அழைத்துச்சென்று பலாத்காரம் செய்ததாகக்கூறப்படுகிறது.
அவர்களிடமிருந்து தப்பிய அப்பெண் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில், ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர்.