சென்னை தேனாம்பேட்டையில், ஆயுதபூஜை தினத்தன்று இளைஞர்கள் சிலர் சாலையில் மதுவிருந்து கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தேனாம்பேட்டை திருவள்ளூர் தெருவில், கடந்த 6-ஆம் தேதி இருசக்கரவாகனம் மற்றும் சரக்கு வாகனத்திற்கு பூஜை செய்த சிறுவர்கள், இளைஞர்கள், மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில், சிலருக்கு மதுபானம் வழங்கி ஆயுதபூஜையை கொண்டாடியுள்ளனர்.
சிறுவர்கள் கையில் மதுபாட்டிலுடன் இருக்கும் வீடியோவை வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் வைத்த நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.