சென்னை அடையாறு ஆற்றிற்கு அடியில் சுரங்கம் வழியாக மெட்ரோ ரயில் சேவைக்காக சுரங்கம் தோண்டும் பணி பருவமழைக்கு பின்னர் தொடங்கப்பட உள்ளது.
இரண்டாம் கட்டமாக நடந்து வரும் மெட்ரோ பணியில் 4 வது வழிப்பாதையான மாதவரம் முதல் சோழிங்க நல்லூர் 47 கிலோ மீட்டர் வரையிலான மெட்ரோ பணி தற்போது நடந்து வருகிறது.
இந்த வழித்தடத்தில் பசுமை வழிச் சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்க பாதையில் மெட்ரோ ரயில் பயணிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக அடையாறு ஆற்றில் 40 மீட்டர் ஆழத்திற்கு மண்பரிசோதனை செய்யும் பணியும் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் பருவமழைக்கு பின்னர் தொடங்கப்படும் என்றும் இதற்காக சீனாவில் இருந்து 2 டனல் போரிங் எந்திரம் கொண்டுவரப்பட உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்