உக்ரைனில் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டது ஆழ்ந்த கவலை அளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா - கிரிமீயாவை இணைக்கும் பாலத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பிற்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றஞ்சாட்டிய நிலையில், கீவ் நகர் மீது ஏவுணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இரு தரப்பும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதனிடையே, இந்தியர்கள் அவசியத் தேவையில்லாமல் உக்ரைனுக்கு செல்ல வேண்டாம் என்றும், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது.