செங்கல்பட்டு அருகிலுள்ள தென்மேல்பாக்கம் என்ற இடத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், முன்னிலையில் 831 கிலோ கஞ்சா மற்றும் 14 கிலோ கெட்டமைன் போதைப் பொருட்களை நீதிமன்ற உத்தரவின் படி அழிக்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை போகைபொருள் விற்பனைதொடர்பாக 908 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 1526 கிலோ கஞ்சா மற்றும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் இதன் மதிப்பு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் என கூறினார்