உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.
அங்குள்ள திரௌபதி கா தண்டா மலைசிகரத்தில் ஏறிய 41 பேர் கொண்ட மலையேறும் குழு, திரும்பி வரும் போது 17 ஆயிரம் அடி உயரத்தில் ஏற்பட்ட பனிசரிவில் சிக்கினர்.
இதுவரை 19 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இலகு ரக ஹெலிகாப்டர்கள் மூலம் உடல்களை கீழே கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எல்லைபாதுகாப்பு படையினர், தேசிய,மாநில பேரிடர் மீட்புக்குழுக்கள், இந்திய விமானப்படையினர் என மொத்தம் 30 குழுக்கள் இந்த மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.