ஓடும் ரயிலின் படிக்கட்டில் ஏறி பயணியிடம் செல்போன் பறிக்க முயன்று கால்இடறி கீழே விழுந்ததில் ரயில் சக்கரத்தில் சிக்கி கால்கள் சிதைந்த திருடனை ரயில்வே போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நவீன் என்ற அந்த வாலிபர் ரயில்கள் மெதுவாக செல்லும் போது படிக்கட்டில் நிற்கும் பயணிகளிடமும், ஜன்னல் வழியாகவும் செல்போன் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அட்டை என்ற நவீன் மீது ஏற்கனவே 6 வழக்குகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.