தெலங்கானாவில் ஆளும் கட்சியான, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பெயர், பாரத் ராஷ்டிரிய சமிதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் தேசிய அரசியலில் ஈடுபட முனைப்பு காட்டி வருகிறார். இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைப்பெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தேசிய அரசியலில் ஈடுபட ஏதுவாக, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பெயரை, பாரத் ராஷ்டிரிய சமிதி என்று பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த புதிய தேசிய கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட கார் சின்னத்தையே ஒதுக்குமாறு தேர்தல் ஆனையத்திடம் முறையிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.