ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் காவலர் ஒருவர் வீரமரணமடைந்த நிலையில், காயமடைந்த சிஆர்பிஎப் வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புல்வாமாவின் பிங்லானா பகுதியில் சிஆர்பிஎப் மற்றும் போலீசாரின் கூட்டுப்படை மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து, அப்பகுதியை வீரர்கள் சுற்றிவளைத்த நிலையில், கூடுதல் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.