போஸ்னியா நாட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் 88 வயதிலும் பறக்கும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
இப்ராஹிம் கலேசிக் என்ற அவர் 1951-ம் ஆண்டில் இருந்து கடந்த 71 ஆண்டுகளாக விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதிப்பதாகவும், 88 வயதிலும் தனது உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை 1487 முறை பாராசூட் மூலம் குதித்திருப்பதாக தெரிவித்துள்ள கலேசிக், இன்னும் 10 வருடங்கள் பராசூட் மூலம் குதிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.