இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு பகுதிகளில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடலோர நகரமான சிபோல்காவிற்கு வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தரைப்பகுதியில் இருந்து 13 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து கடலோர பகுதிகளில் உள்ள கட்டுமானங்கள் கடுமையாக குலுங்கின. நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதால், பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.
நிலநடுக்கத்திற்கு ஒருவர் உயிரிழந்த நிலையில், 11 பேர் காயமடைந்துள்ளனர்.