தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 14ஆம் தேதிக்குள் பட்டாசு விற்பனை தொடங்கும் என்றும் இந்தாண்டு 99 சதவீதம் பசுமை பட்டாசுகளே விற்பனைக்கு வர உள்ளதாகவும் பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தீவுத்திடலில் திறக்கப்பட உள்ள 55 கடைகளிலும் சீனப் பட்டாசுகள் ஒருபோதும் விற்கப்படாது என்றும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பட்டாசுகளின் விலையில் பெரிய அளவில் உயர்வு இருக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.