தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் நடைபெற்ற தேர்தலில் 8 வார்டுகளை கைப்பற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது தேர்தல் விதிகளை மீறியதாக இங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி கடந்த 29ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
மொத்தமுள்ள 12 வார்டுகளில், 3 வார்டுகளுக்கு சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், எஞ்சியுள்ள 9 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு திமுக 6 இடங்களிலும், மதிமுக, காங்கிரஸ், சுயேட்சை தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.