சீனாவுடன் பரஸ்பர மரியாதை கலந்த நட்புறவு நீடிக்க வேண்டும் என்று இந்தியா விரும்புவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அசல் எல்லைக் கோடு பகுதியில் இந்தியா சீனா படைகள் குவிப்பு காரணமாக எழுந்த அசாதாரண சூழ்நிலை தற்போது இயல்புக்குத் திரும்பி வருவதாக இந்தியாவுக்கான சீனத் தூதர் சூன் வெய்டாங் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக வாஷிங்டனில் பேசிய ஜெய்சங்கர், சீனாவுடன் பரஸ்பர மரியாதை கலந்த உறவை நாடுவதாகத் தெரிவித்தார். எல்லையில் இயல்பான நிலைமை திரும்பவில்லை என்று கூறிய அவர் இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் விளக்கத்தை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.