விண்வெளியில் யோகாசனம் செய்யும் விண்வெளி வீராங்கனையின் வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
பூமியிலிருந்து 408 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் 45 வயதான சமந்தா கிறிஸ்டோஃபெரெட்டி நீண்ட நாட்களாக தங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.
புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் எலாஸ்டிக் பேண்ட் மாட்டிக் கொண்டு காஸ்மிக் கிட் பயிற்சியாளரின் உதவியுடன் சமந்தா சமநிலையில் யோகாசனம் செய்தார்.