இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பல்லுயிர் பூங்கா, சூரத்தின் ட்ரீம் சிட்டி திட்டம் உள்ளிட்ட பல திட்டப் பணிகளை துவக்கி வைத்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஆயுஷ்மன் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள சுமார் 4 கோடி ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக, விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.