புதுச்சேரியில் மின்வாரிய ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் மின்தடை ஏற்பட்டத்தை கண்டித்து பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு எதிரே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் பேருந்துகள் நின்றிருக்கின்றன.
மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.