அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இயான் புயலால் கடும் காற்று வீசிய நிலையில் 1.8 மில்லியன் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது.
மேலும் புளோரிடாவில் உள்ள ஃபோர்ட் மியர்ஸ் கடற்கரையில் பலத்த காற்றுடன் கூடிய மழையால் வீதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
தாழ்வான பகுதிகளில், வீடுகள் தண்ணீரில் மூழ்கியிருந்த காட்சிகளும் வெளியாகி உள்ளன.