இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகராக மூத்த வழக்கறிஞர் வெங்கடரமணியை மத்திய அரசு நியமித்துள்ளது. தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வரும் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைவதையொட்டி, வெங்கடரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த 3 ஆண்டுகாலம் தலைமை வழக்கறிஞராக செயல்படும் வெங்கடரமணி, கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். மேலும், கடந்த 12 ஆண்டுகளாக தமிழக அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞராகவும் அவர் செயல்பட்டுள்ளார்.