தெலுங்கானாவில் பட்டியலின பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை 6 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்துவது குறித்த முதலமைச்சரின் அறிவிப்பில் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இட ஒதுக்கீடு உயர்த்துவது தொடர்பான அரசாணை ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடந்த 17-ம் தேதி அறிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலை முன்வைத்து அறிவித்திருப்பதாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 50 சதவீதம் இடஒதுக்கிடு உள்ள நிலையில் 4 சதவீதம் அதிகரித்தால் அது உச்சநீதிமன்றம் நிர்ணயித்த 50 சதவீத உச்ச வரம்பிற்கு எதிரானது என்பதால் 10 நாட்களை கடந்தும் இதற்கான எந்த உத்தரவும் மாநில அரசு வெளியிட முடியாமல் இருந்து வருகிறது.