1 நிமிடம் வரையிலான வீடியோவை பதிவேற்றும் வசதியை இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Stories என்ற பிரிவில் முன்பு 1 நிமிட வீடியோவை பதிவேற்றம் செய்தால், அது 15 விநாடி வீடியோக்களாக 4 பிரிவுகளாக பிரிந்து பதிவேற்றம் ஆகும். இதனால் வீடியோ பதிவேற்றம் செய்வோர், 15 விநாடி வீடியோக்களாக பதிவேற்றும் நிலை இருந்தது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு கடந்த ஆண்டு குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் புதிய வசதியை இன்ஸ்டாகிராம் பரிசோதித்து வந்தது. இதில் கிடைத்த முடிவின் அடிப்படையில், உலகம் முழுவதும் 1 நிமிட வீடியோவை பதிவேற்றும் வசதியை இன்ஸ்டாகிராம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.