வங்காளதேசத்தின் பஞ்சகர் மாவட்டத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
70க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற படகு, மரியா யூனியன் பகுதியில் உள்ள ஆற்றில் பிற்பகலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
மாயமானவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வங்காள தேசத்தில், படகுகளில் பாதுகாப்புத் தரம் குறைவாக இருப்பதாலும் அதிகளவில் சுமை ஏற்றிச் செல்வதாலும் அடிக்கடி படகுகள் கவிழ்ந்து விபத்து நேரிடுவதாக கூறப்படுகிறது.