குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு 3 நாட்கள் பயணமாக நாளை கர்நாடகா செல்கிறார். குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றபின் முதல் மாநில பயணமாக கர்நாடகாவிற்கு செல்கிறார்.
நாளை மைசூர் சாமுண்டி மலையில் தசரா விழாவை தொடங்கி வைக்கும் அவர், தார்வாட்டில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் திறந்து வைக்கிறார்.
நாளை மறுநாள் பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின்கள் உற்பத்தியையும் குடியரசுத்தலைவர் தொடங்கிவைக்கிறார்.