புதுச்சேரியில் 2 குழந்தைகள் உட்பட 8 பேருக்கு புதிதாக பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து புதுச்சேரியில் அக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளதாகவும், இதில் 7 பேர் மருத்துவமனைகளிலும், 8 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு விடப்பட்ட விடுமுறை இன்றுடன் முடிவுக்கு வருவதாகவும், நாளை மீண்டும் வகுப்புகள் தொடங்கப்படுமென்றும், திட்டமிட்டபடி காலாண்டு பொதுத் தேர்வு நாளை தொடங்கும் என்றும் புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.