உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள புனித கேதார்நாத் கோவிலை சுற்றியுள்ள மலைகளில் பனிச்சரிவு ஏற்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கோவிலில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சோராபரி பனிப்பாறையின் ஒரு பகுதி நேற்று மாலை சரிந்து, வெண்போர்வை போர்த்தியது போல காட்சியளித்தது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, ருத்ரபிரயாக் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
அம்மாநிலத்திற்கு, நாளை வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.