அமெரிக்காவில் Brake failure ஆனதால் லாரி கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
மாசாசூசெட்ஸ் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பின்னர் கடலுக்குள் நேராக சென்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
30 மைல் வேகத்தில் மட்டுமே லாரி சென்றதால், அதை செலுத்திய டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.