சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். பிரிக்ஸ் அமைப்பு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது.
இந்த மாநாட்டின் இடையே சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். லடாக் எல்லையில் இந்தியாவும்., சீனாவும் படைகளை குவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
அதேபோல் மும்பைத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஸ்கரே தொய்பா கமாண்டர் Sajid மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க செய்யும் முயற்சிக்கு சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டது.
இதற்கு சீனாவை ஜெய்சங்கர் மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார். இந்த சூழ்நிலையில் சீன வெளியுறவு அமைச்சரை ஜெய்சங்கர் சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.