உத்தர பிரதேசத்தில் மருத்துவமனையில் அசைவற்ற நிலையில் பிறந்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து மூச்சை செலுத்தி 7 நிமிடங்கள் குழந்தைகள் நல மருத்துவர் அளித்த உயிர்ப் போராட்டத்தின் காரணமாக, குழந்தை கண் விழித்துப் பார்த்தது.
ஆக்ரா மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி ஒருவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது குழந்தை அசைவற்று இருந்துள்ளது.
உடனடியாக குழந்தைகள் நல மருத்துவர் சுலேகா சௌத்ரி, குழந்தையைக் கையில் ஏந்தி வாய் வைத்து காற்றை செலுத்திய அவர், பிறகு குப்புற போட்டு முதுகை நன்கு தட்டினார். மருத்துவரின் இந்த முயற்சியை அடுத்து குழந்தை கண்விழித்து பார்த்தது.